ConspiracyIlluminati

பதிவு எண் :002 | தலைப்பு | சக்கரை நோய் வருவதற்கு காரணம் எது ? | lifestyle | illuminati conspiracy |

May 20, 2021 By



தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் “ஸ்ட்ரோக்’ என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது. கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை.

இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

மேலும் வாசிக்க : https://vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba8bc0bb0bbfbb4bbfbb5bc1-ba8bafbcd/b9abb0bcdb95bcdb95bb0bc8-ba8bafbcd-baabb1bcdbb1bbf-b85bb1bbfbaf-bb5bc7ba3bcdb9fbbfbaf-ba4b95bb5bb2bcdb95bb3bcd

Original



1 Comment on "பதிவு எண் :002 | தலைப்பு | சக்கரை நோய் வருவதற்கு காரணம் எது ? | lifestyle | illuminati conspiracy |"


Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *